malayalam versiontamil versionkannada versionenglish version
homephoto gallerymathrubhumi officesayappa templespooja calendarguest book
சுவாமி சரணம்- மண்டலக்கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது.- மாத்ருபூமி சபாமலை அலுவலகத்தில் ம்முறை மலையாளத்தைத் தவிர தமிழ், கன்னடம், ங்கில மொழிகளும்.- சபாமலை சுத்தீகாப்பு வேலைக்காக வ்வாண்டு 600 தொழிலாளர்கள்.
சரணம் ஐயப்ப  கட்டுரைகள்

ஐயப்பனும் பாண்டிய அரசவம்சமும்

கே.ர்.கே. பிரதீப்

பந்தளம் அரச வம்சத்திற்கும் சபாமலைத் திருக்கோயிலுக்கும் டையே உள்ள நெருங்கிய தொடர்பைப் போலவே கோந்நி முருங்கைமங்கலம் மகாதேவர் கோயிலுக்கும் பந்தளம் அரசவம்சத்திற்கும் தொடர்பு உள்ளது. சில வரலாற்று உண்மைகள் தற்கான சான்றுகளாக அமைகின்றன. பாண்டிய அரச வம்சத்தின் ஒரு கிளைதான் பந்தள அரசவம்சம். அகத்தியமுனிவர் எழுதிய 'ஹாலாஸ்யமஹாத்மியம்' என்னும் நூலில் சிவ பக்தர்களான பாண்டிய அரசவம்சத்தின் ஒரு கிளை மதுரையைத் தலைநகராகக்கொண்டு ட்சிபுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வர்களால் கட்டப்பட்டவைதான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் பழனி சுப்பிரமணியசுவாமி கோயிலும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலும். பாண்டிய வம்சத்தின் 'செம்பழன்னூர்' கிளை தெங்காசி கொட்டாரத்தில் வாழ்ந்தது. வர்களுக்கு வேணாட்டு அரசவம்சத்துடன் நெருங்கிய தொடர்பு ருந்ததாக நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

மதுரைப் பாண்டிய அரசர்கள் உள்நாட்டுக் கலகங்கள் காரணமாக வீழ்ச்சி அடைந்தனர். பின்னர் வர்கள் அமைச்சர் திருமலைநாயக்கான் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு ட்சிபுயவேண்டிய நிலைக்கு ளாகிவிட்டனர். செம்பழன்னுர் கிளையைச் சார்ந்த ஒரு ராஜகுமாரன் திருமலைநாயக்கான் மகளைத் திருமணம் செய்யவேண்டுமென்ற சை நாயக்கருக்கு ருந்தது. னால் அவரது சையை நிறைவேற்ற பாண்டிய அரசர்கள் தயாராகவில்லை. தனால் திருமலைநாயக்கருக்கு ராஜகுடும்பத்தாடம் கடுமையான கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டது. நாயக்கான் மறவர்படை தெங்காசியில் பெரும் கெடுதல்களை விளைவித்தது. 'தீவெட்டிக்கொள்ளை' என்பதுதான் வர்களது க்கிரமிப்பு முறை. க்கிரமிப்பில் அமைதியை ழந்த செம்பழன்னூர் அரசர்கள் வேணாட்டு அரசான் வேண்டுகோளின்படி, செங்கோட்டைத் தாலுகாவிலுள்ள லத்தூர் மணியம் என்னும் கிராமத்தையும் புளியங்குடிக்கு வடக்கேயுள்ள மலைப்பகுதிகளையும் விலைக்கு வாங்கி அங்கேயே குடிகொண்டனர். னால் அங்கும் திருமலைநாயக்கான் மறவர்படை க்கிரமிப்பும் தீவெட்டிக்கொள்ளையும் நடத்தியது.

சீர்குலைந்துபோன பாண்டிய அரசர்கள் அச்சன்கோவில் என்னும் பகுதியில் கொட்டாரம் அமைத்து அங்கு குடியேறினர். அன்றைய வேணாட்டு அரசர் கொல்லமாண்டு 79, கன்னிமாதம் (புரட்டாசி மாதம்) 11 ம் நாள் வழங்கிய செப்புப்பட்டயத்தின் அடிப்படையில்தான் பாண்டிய வம்சம் கேரளக்கரையில் வாழத்தொடங்கியது. அப்போதும் லத்தூர் பகுதியில் தீவெட்டிக் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிக்கொண்டு ஒரு பிவினர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. னால் லத்தூலும் அச்சன்கோவிலிலும் மறவர்படை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் பெண்களையும் குழந்தைகளையும் பிராமணர்களையும் அச்சன்கோவிலுக்கு மேற்கே 24 கல் தொலைவில் அச்சன்கோவில் ற்றின் வடக்குக் கரையிலுள்ள கோந்நியூர் என்ற டத்தில் தங்கவைத்தனர். அங்கே கோயிக்கலும் (கொட்டாரம்) மனைகளும் மடங்களும் கோயில்களும் அமைத்தனர். அமைச்சர்களின் குடும்பங்களை ராந்நி என்னும் டத்தில் தங்கவைத்தனர். கோந்நிக்கும் அச்சன்கோவிலுக்கும் டையே பல டங்களிலாகப் பந்தளத்து அரசான் குடிகளும் படைவீரர்களும் தங்கினர். அச்சன்கோவிலிலும் அச்சன்கோவில் ற்றின் கரையோரமாகவும் முக்கியமான ஏழு டங்களில் அமைக்கப்பட்ட அன்றைய கோயில்களும் குடியிருப்புக்களும் அழிந்துபோயின எனினும் அவற்றின் எச்சங்களை ப்போதும் காணலாம்.

கேரளத்தில் பழைய செம்பழன்னூர் கிளையினரான பாண்டிய அரசர்கள் அமைத்த புராதன கோயில்களில் எஞ்சியிருப்பது கோந்நி முருங்கைமங்கலம் மகாதேவர் கோயில் மட்டுமே. செங்கன்னூர் மகாதேவர் கோயிலுக்குக் கிழக்கே வ்வளவு விஸ்தாரமான ன்னொரு கோயில் ல்லை. கொல்லமாண்டு 79 ல் (கி.பி. 904) எழுதப்பட்ட செப்புப்பட்டயத்தின்படி க்கோயிலும் கோந்நி கிராமமும் கொல்லமாண்டு ஒன்று-ரண்டு நூற்றாண்டுக்கு டைப்பட்ட காலத்தில் அமைத்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

கொல்லமாண்டு 345 க்குப் பிறகுதான் (கி.பி. 1170) கோந்நியிலிருந்து பாண்டியராஜவம்சம் பந்தளத்திற்குச் சென்று நிலையாகத் தங்கத்தொடங்கியது. பல ண்டுகளாக கோந்நியில் வாழ்ந்துவந்த அரசவம்சத்தினான் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியது முருங்கைமங்கலம் மகாதேவர் கோயிலாகும். கோயில்களைப் பாதுகாப்பதில் சில அதிகாகள் ர்வம் காட்டாத காரணத்தால் சீரழிந்துபோன கோயில்களில் முருங்கைமங்கலம் கோயிலும் ஒன்று. க் கோயிலின் ஸ்ரீகோயில் பகுதியும் நமஸ்கார மண்டபத்தறையும் நாலம்பலத்தறையும் மட்டுமே அழிந்துபோகாமல் எஞ்சியுள்ளன. செப்புத்தகிடு வேய்ந்த ஸ்ரீகோயில் கொல்லமாண்டு 112ல் (கி.பி. 937) புதுப்பிக்கப்பட்டது.

சிவபக்தர்களான பாண்டிய அரசர்கள் முருங்கைமங்கலம் கோயிலை அடிப்படையாகக்கொண்டே கோந்நியூர் கிராமத்தை உருவமைத்தனர். அரசாட்சிக் காலத்தில் நான்கு கரைகள் (மிகச்சிறிய அரசியல் நிர்வாகப் பிவு) சேர்ந்த தாலுகா மையமாக விளங்கியது கோந்நி. அச்சன்கோவில் ற்றுக்கு வடக்குக் கரையில் ராஜகுடும்பத்தினர் வாழ்ந்துவந்த எட்டு அரண்மனைகளும் பிராமணர்கள் குடியிருந்த மனைகளும் மடங்களும் கைமாறிப் போய்விட்டன எனினும் ன்றும் நிலைபெறுகின்றன. படைவீரர்கள் யுதப் பயிற்சி செய்துவந்த களாக்கலும், மல்லச்சோயும், வாள்முட்டவும் (வாழமுட்டம்) அதே பெயாலேயே ன்றும் அறியப்படுகின்றன.

அச்சன்கோவில் ற்றின் தெற்குக் கரையில் ரண்டு அரண்மனைகளும் ளங்ஙபட்டம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலும் 'பட்டத்தானங்ஙளும்' ஒரு மனையும் உள்ளன. கோந்நியை விட்டுவிட்டு பந்தளத்திற்கு டம் மாறிய அரசர்கள், அவர்களை ஒட்டிவாழ்ந்தவர்களில் ஒரு பிவினரையும் உடன் அழைத்துச் சென்றனர். கோந்நியிலுள்ள பல வீட்டுப் பெயர்களும் பந்தளத்திலும் வழங்கப்படுவது தற்கு தாரமாக விளங்குகின்றது. கொல்லமாண்டு 995 (கி.பி.1820) உடம்படிக்கைக்குப் பின்னும் அன்றைய பந்தளம் அரசர்கள் ண்டிற்கு ஒருமுறை முருங்கைமங்கலம் கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்திச் சென்றனர். னால் அப்பழக்கம் ப்போது பின்பற்றப்படவில்லை.

கோந்நியூரை விட்டுவிட்டு பந்தளத்தைத் தலைமை டமாகக்கொண்டு அங்கு குடியேறிய பாண்டிய அரசர்கள் முருங்கைமங்கலம் கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டுச் சில குடும்பங்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர். அன்றாட பூஜை புனஸ்காரங்களுக்காக கரவேலிமடம் பிராமண குடும்பத்திடமும், பிற கோயில் காயங்களுக்காக தேவலச்சோ உண்ணிகள் குடும்பத்திடமும் தற குடுபத்திடமும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. கோயிலின் ட்சிப் பொறுப்பு ஊருவேலில் குடும்பத்தாடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களைத் திறம்பட நடத்த தேவையான நிலபுலன்களும் வஸ்துவகைகளும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டது. முருங்கைமங்கலம் கோயிலில் செய்யவேண்டிய மரவேலைகளையும் ரும்பு வேலைகளையும் செய்வதற்கான பொறுப்பு அங்காடி சாமாடமும் அறப்புறை கொல்லர்களிடமும் ஏற்பிக்கப்பட்டது.

அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கும் சூழலை அடிப்படையாகவைத்து முருங்கைமங்கலம் கோயிலில் பிரதிஷ்டை நடத்தப்பட்டுள்ளது. கோயில் பாதுகாப்பிற்காக வெவ்வேறு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வஸ்துவகைகள், திருவிதாங்கூர் அரசு ஏற்படுத்திய 'கண்டெழுத்தும் கரம் நிச்சயித்தலும்' காரணமாக அரசுக்கு சொந்தமானது. செங்கோட்டை தாலுகாவில் அச்சன்கோவிலில் முருங்கைமங்கலம் கோயிலுக்குச் சொந்தமாக ருந்த ரண்டாயிரப்பறை நிலம், ந்தியா மொழிவழி மாநிலங்களாகப் புனரமைக்கப்பட்டபோது தமிழ்நாட்டிற்கு சொந்தமாகிவிட்டது. முருங்கைமங்கலம் கோயில் சீவேலியின்போது எழுந்தருளப் பயன்படுத்திய யானைக்கும் யானைப் பாகருக்கும்கூடத் தனியாக நிலன்களை வழங்கியிருந்தனர் பந்தளம் அரசர்கள்.