malayalam versiontamil versionkannada versionenglish version
homephoto gallerymathrubhumi officesayappa templespooja calendarguest book
சுவாமி சரணம்- மண்டலக்கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது.- மாத்ருபூமி சபாமலை அலுவலகத்தில் ம்முறை மலையாளத்தைத் தவிர தமிழ், கன்னடம், ங்கில மொழிகளும்.- சபாமலை சுத்தீகாப்பு வேலைக்காக வ்வாண்டு 600 தொழிலாளர்கள்.
புனிதப்பயணம்  பூங்காவனம்

பூங்காவனம்

பம்பையிலிருந்து நடந்துவந்து கடினமான காமலையையும் தாண்டி சுவாமி சன்னிதானத்தை அடையும்போது பக்தர்களுக்கு அளவிடமுடியாத அனுபூதி உண்டாகும். செங்குத்தான நீலிமலையில் ஏறிச்செல்வது எளிதல்ல என்றாலும் பூங்காவனத்தின் டைவழியே செல்லும்போது பக்தர்கள் னந்தக்களிப்பு அடைகின்றனர். கலியுகவரதனாம் சுவாமி ஐயப்பனைத் தாசிக்க வருகின்ற பக்தர்கள் எவ்வித ன்னல்களையும் டையூறுகளையும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என டிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்வது தற்கு எடுத்துக்காட்டு. பம்பா நதியில் புண்ணிய நீராடி, பாவங்களிலிருந்து முக்திபெற்று, ருமுடிக்கெட்டைத் தலையில் சுமந்து, டைவிடாது சரணமந்திரங்களை உருவிட்டுக்கொண்டு மலையேறத் தொடங்கும் பக்தர்கள் முதலில் தேங்காய் உடைத்து பம்பா கணபதியை வழிபடுகின்றனர். வினைதீர்க்கும் விநாயகன் துணை ருந்தால் வந்த வினைகளெல்லாம் வழிமாறிச் சென்றுவிடும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. தொடர்ந்து சக்தி, ஸ்ரீராமன், ஹனுமான் கோயில்களிலும் வழிபாடுகள் நடத்தியபின் பந்தள அரசான் ருப்பிடத்திலிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டு மீண்டும் மலையேறுகின்றனர். செங்குத்தான நீலிமலை ஏறி அப்பாச்சிமேட்டை அடையும்போது கன்னி ஐயப்பன்மார்கள் அசிப்பொடியால் உண்டாக்கிய உருண்டைகளை மலை அடிவாரத்தைநோக்கி வீசி எறிகின்றனர். தீய சக்திகளை (துர்தேவதைகள்) திருப்திப்படுத்துவதற்காக வ்வாறு செய்யப்படுகின்றது.

மேலும் சிறிது தூரம் ஏறிச்சென்றால் சபாபீடத்தை அடையலாம். சபா என்னும் மாமுனி ங்கிருந்துதான் றைவனோடு ணைந்தார் (சொர்க்க ரோகணம்) என்று சொல்லப்படுகின்றது. ஐயப்ப பக்தர்கள் சபாபீடத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றிவைத்து வழிபாடுகள் நடத்தியபின் மீண்டும் மலை ஏறுகின்றனர். தொடர்ந்து சமதலமான மரக்கூட்டத்தை அடைகின்றனர். பம்பையில்வைத்துப் பிந்துசெல்லும் சுவாமி ஐயப்பன் ரோடு ங்கு ணைகின்றது. அடுத்த டம் சரம்குத்தி. கன்னி ஐயப்பன்மார்கள் கையில் கொண்டுவரும் சரத்தை (சிறிய அம்பு) ங்குள்ள மரங்களில் தறித்து (குத்தி) வைத்தபின்னரே பதினெட்டாம்படி ஏறவும் ஐயப்ப தாசனம் நடத்தவும் வேண்டும் என்பது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டுவருகின்றது.

சன்னிதானத்தை அடையும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படியின் ருமருங்கும் கோயில்கொண்டிருக்கும் கறுப்பசுவாமியையும் கடுத்தசுவாமியையும் வழிபட்டு தேங்காய் உடைத்தபின் சரணமந்திரங்களை ஒலித்துக்கொண்டே பதினெட்டு படிகளிலும் ஏறிச்சென்று கருணாமூர்த்தியான கானனவாசனாம் சுவாமி ஐயப்பனைக் கண்குளிரத் தாசனம் செய்கின்றனர். துளசிமாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ருமுடி ஏந்திவராத பக்தர்கள் பதினெட்டுபடிகள் ஏறக்கூடாது. னால் அவர்கள் வடக்குப் பக்கத்திலுள்ள படிகள்வழியாக ஏறி ஐயப்பனை தாசிக்கலாம். சன்னிதானத்திலுள்ள திருநீற்றுக்கேணியில் (பஸ்மக்குளம்) நீராடிவரும் பக்தர்கள் திருசன்னதிக்குச் சென்று ஐயன் ஐயப்பனை வணங்கியபின் 'சயனப் பிரதக்ஷிணம்' (ஈரத்துணியுடன் படுத்துக்கொண்டே கோயிலைச் சுற்றி உருளுதல்) செய்வதுண்டு. ஐயப்பனை தாசித்து அருள்பெற்ற பக்தர்கள் பின்னர் கன்னிமூலை கணபதியையும் மாளிகைப்புறத்து தேவியையும் வணங்கி வழிபடுகின்றனர்.