malayalam versiontamil versionkannada versionenglish version
homephoto gallerymathrubhumi officesayappa templespooja calendarguest book
சுவாமி சரணம்- மண்டலக்கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது.- மாத்ருபூமி சபாமலை அலுவலகத்தில் ம்முறை மலையாளத்தைத் தவிர தமிழ், கன்னடம், ங்கில மொழிகளும்.- சபாமலை சுத்தீகாப்பு வேலைக்காக வ்வாண்டு 600 தொழிலாளர்கள்.
கோயில்  நெய்யபிஷேகம

நெய்யபிஷேகம

கடுமையான காட்டுவழியைக் கடந்து சன்னிதானத்தை வந்தடையும் அய்யப்ப பக்தர்கள் அய்யப்ப தாசனம் பெற்றபின் முதலில் செய்வது நெய்யபிஷேகத்திற்கான ஏற்பாடுகளாகும். சபாமலையில் நடைபெறும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்றுதான் நெய்யபிஷேகம். சபாமலைப் புனிதயாத்திரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஐயனுக்கு நெய்யபிஷேகம் செய்வது என்பதாகும். விரத சுத்தியுடன், சரண மந்திரங்களின் ஒலிமுழங்க, தேங்காயில் நிறைக்கப்பட்டு ருமுடிக்கெட்டினுள் பத்திரமாகக் கொண்டுவரும் பாசுத்தமான நெய்யை பகவானின் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்கின்றபோது அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொருவரும் பக்திப்பரவசத்தால் னந்தத்தின் எல்லையை அடைவர். உண்மையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக ணைவதன் அடையாளம்தான் நெய்யபிஷேகம். ந்துமதத் தர்மத்தின்படி பிறப்பு- றப்புக்களின் துன்பங்களில் அல்லலுறும் ஜீவாத்மா, பகவானின் அரவணைப்பைப் பெறும்போது அதாவது பரமாத்மாவுடன் ரண்டறக் கலக்கும்போது பிறப்பு-றப்புக்களிலிருந்து விடுபட்டு வீடுபேற்றை அடைகின்றது. நெய்த் தேங்காயில் ருக்கும் நெய்யை பகவானுக்கு அபிஷேகம் செய்தபின், பாதித் தேங்காயைப் பதினெட்டாம் படிக்குக் கீழேயுள்ள அக்னிகுண்டத்தில் எறிவர். மீதித் தேங்காயை பகவானின் பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டுவருவர்.

விழாக்காலங்களில் விடியற்காலை 4.15 க்கு ரம்பமாகும் நெய்யபிஷேகம் 11.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும். ஐயப்ப பக்தர்களின் வசதியைக் கருதி நெய்யபிஷேகத்திற்கான சீட்டைப் பல்வேறு டங்களில் பெறுவதற்கான ஏற்பாடுகளைத் 'தேவஸம் போர்டு' (திருவிதங்கூர் அறங்காவல் அமைப்பு) செய்துள்ளது.