கோயில்
வழிபாடுகள்
வழிபாடுகள்
ண்டுதோறும் சபாமலைப் பக்தர்களின் எண்ணிக்கை அதிகாத்து வருகிறது என்றாலும், பரம்பரை முறையிலான கோயில் தாசனம்பற்றி பலருக்கும் தொயாது. ருமுடிக்கெட்டில் எந்தெந்தப் பொருட்களை நிறைக்கவேண்டும் என்பதைக்கூடத் தொயாதவர்கள் உள்ளனர். வற்றையெல்லம் சொல்லிக்கொடுக்கும் குருசாமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. சபாமலைப் புனிதப்பயணமும் ஒரு வேகப் பயணமாக மாறிவருகின்றது.
பள்ளிக்கெட்டைத் தலையில் தாங்கிக்கொண்டுதான் அய்யப்ப பக்தர்கள் சபாமலைக்குப் போய்க்கொண்டிருந்தனர். வனப்பகுதியில் அமைந்த கோயில் என்பதால் பண்டைக்காலங்களில் அங்கு உணவு வசதிகள் எதுவும் ருக்கவில்லை. எனவே வழிபாட்டுப் பொருட்களுடனும் உணவுக்கான பொருட்களையும் எடுத்துச் சென்றனர். பள்ளிக்கெட்டை 'ருமுடிக்கெட்டு' என்றும் கூறுவர். முன் முடியில் வழிபாட்டு பொருட்களும், பின் முடியில் உணவுக்கான பொருட்களையும் வைத்திருப்பர். முன்பெல்லாம் பாய், கம்பிளி, உணவு சமைப்பதற்கான பாத்திரங்கள் முதலானவற்றையும் கொண்டுசெல்லும் வழக்கம் ருந்தது. ருமுடிக்கெட்டின் நிறத்தைப் பார்த்து கன்னி ஐயப்பனைக் கண்டறிந்தனர். முதன்முதலாக சபாமலை செல்பவர்கள் அதாவது 'கன்னி ஐயப்பன்மார்கள்' சிவந்த பட்டாலான ருமுடிக்கெட்டைக் கொண்டுசெல்வது வழக்கம். பிறரது ருமுடிக்கெட்டு வெள்ளைத் துணியால் அமையும். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.
முன் கட்டுக்குள் நிறைக்கவேண்டிய வழிபாட்டுப் பொருட்கள்:
வெற்றிலை, பாக்கு, நாணயம், தேங்காய், நெய்த்தேங்காய், கற்பூரம், மஞ்சள்பொடி, அவல், பொ, கற்கண்டு, உலர் திராட்சை, தேன், பன்னீர், கதலிப்பழம், வறுத்த அசிப்பொடி, புழுக்கலாசி, நல்லமிளகு, காலிப்புகையிலை கியவை. வற்றுடன் கஞ்சா பொதியும் கொண்டு செல்லும் பழக்கம் பண்டைக் காலத்தில் ருந்தது. சன்னிதானத்தில் குடிகொள்ளும் கறுப்பசுவாமிக்கும் கடுத்தசுவாமிக்கும் கஞ்சாவை வழிபாடு செய்தனர். வெற்றிலை, பாக்கு, தேங்காய், நெய்த்தேங்காய் கியவற்றை சரணமந்திரம் முழக்கிக்கொண்டே முதலில் கட்டில் நிறைக்கவேண்டும். நெய்த்தேங்காய் ஐயப்பனின் அபிஷேகத்திற்குயது. மலைப்பயணம் முடிந்து திரும்பி வரும்போது வெற்றிலை, பாக்கு, நாணயம் கியவற்றைத் தங்கள் ஊர்த் தெய்வத்திற்குக் காணிக்கையாக வழங்குவர்.
கட்டுக்குள் ஒன்றுக்கு அதிகமான தேங்காய்கள் கொண்டுசெல்பவர்களும் உண்டு. காமலை மூர்த்தி, பம்பை கணபதி, பதினெட்டாம்படி கிய டங்களில் தேங்காய் உடைப்பதுண்டு. சபாமலை ஸ்ரீ அயப்பன் கற்பூரப் பியனாவான். எனவே எல்லா வாசல்களிலும் கற்பூரம் கொளுத்திவைத்து சரணம் விளிப்பது வழக்கம். நாகயக்ஷிக்கும் நாகராஜாவுக்கும் மாளிகைப்புறத்திலும் மஞ்சள்பொடியைத் தூவுவார்கள். மாளிகைப்புறம் திருக்கோயிலைச் சுற்றி ஐயப்பன்மார்கள் தேங்காய் உருட்டுவதும் உண்டு. குழந்தைப் பேற்றிற்காக அவல், பொ, கற்கண்டு, உலர் முந்தி, வறுத்த அசிப்பொடி கியவற்றை கடுத்தசுவாமிக்கு வழிபாடுசெய்வர். கறுப்பசுவாமிக்கு காலிப்புகையிலையும், வாவர் சுவாமிக்கு நல்லமிளகும் வழிபாடாக வழங்கப்படும்.
உணக்கல் அசி, உருண்டை சர்க்கரை (வெல்லம்), கதலிப்பழம் கியவை ஐயப்பனின் நிவேத்திய பொருட்களாகும். பின்முடிக் கட்டுக்குள் வைத்திருக்கும் அசி சுயம் கூழ்சமைத்துக் குடிப்பதற்காகும். மிளகாய்ப்பொடியும் ஊறுகாயும் சுட்ட பப்படமும் ஒருதுண்டு தேங்காயும் ருந்தால் எல்லாம் சுபிட்சம்தான்.