சரணம் ஐயப்ப
செய்திகள்
சபரிமலைத் தீர்த்தாடன பக்தர்களுக்காக ரயில்வே வசதிகள் செய்துள்ளது
திருவனந்தபுரம்: சபரிமலைத் தீர்த்தாடன பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்திருப்பதாக ரயில்வே பத்திரிகைச் செய்தி அறிவித்துள்ளது. பம்பையில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் தனியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவித்துள்ள கொச்சுவேளி-சென்னை, கொச்சுவேளி- யஸ்வந்த்பூர், எர்ணாகுளம்-பங்களூர் ரயில்கள் தவிர, ஆந்திராவிலிருந்தும் சிறப்பு ரயில்கள் விடப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகாத்தால் அப்போதுள்ள ரயில்களில் அதிக பெட்டிகள் அணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக வந்து செல்கின்ற செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம் சந்திப்பு ரயில்வே நிலையங்களில் சர்வு செய்யப்படாத பயணச் சீட்டுக்களுக்காக அதிக கவுண்டர்கள் திறக்கவும், முன்பதிவு மையங்களை கூடுதல் சக்திப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான தகவல் மையங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக கூடுதல் ஊழியர்கள் அன்நிலையங்களில் அமர்த்தப்படுவர். மகரவிளக்கின்போது பக்தர்கள் நெரிசல் அதிகாக்கும் நாட்களான ஜனவரி 14 முதல் 16 வரையிலும் காயங்கள் நல்லபடியாக நடக்கின்றன என்பதை உறுதிப்படுத்த 'சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேனேஜரின்' தலைமையில் ரயில்வே அதிகாரிகளின் ஒரு சங்கம் கோட்டயத்தில் தங்கியிருக்கும். பக்தர்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
വാര്ത്തകള്